படம்: ட்விட்டர் | இங்கிலாந்து கிரிக்கெட் 
செய்திகள்

17வது முறையாக ஒரே வீரரிடம் ஆட்டமிழப்பு: சிரித்துக் கொண்டே வெளியேறிய வார்னர்! வைரல் விடியோ! 

பிரபல ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 17வது முறையாக இங்கிலாந்து வீரர் பிராட் ஓவரில் ஆட்டமிழந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

DIN

2-0 என ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஜூலை 6ஆம் நாள் 3வது ஆஷஸ் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஆஸி.263 ரன்களுக்கும் இங்கிலாந்து 237 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இதனையடுத்து ஆஸி. இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி வருகிறது. 2ஆம் நாள் முடிவில் ஆஸி. 116/4 ரன்கள் எடுத்துள்ளது. 

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் மோசமான சாதனையை படைத்து வருகிறார். ஸ்டூவர்ட் பிராட் வார்னரை இதுவரை 17முறை விக்கெட் எடுத்துள்ளார்.

வார்னர் ஸ்டூவர்ட் பிராட் சுழலில் சிக்கித் திணறி வருகிறார். இரண்டாவது இன்னிங்ஸிலும் பிராட்டிடம் விக்கெட்டை பறிகொடுத்து சோகத்திற்கு பதிலாக முகத்தில் சிரிப்புடன் வெளியேறிய வார்னரின் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT