செய்திகள்

இலங்கை-பாகிஸ்தான் முதல் டெஸ்ட்: தடுமாறும் இலங்கை அணி (58/4)

பாகிஸ்தான் அணியுடனான தனது முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தடுமாறி வருகிறது. 

DIN

பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் தொடங்கியது. 

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே பேட்டிங்கினை தேர்வு செய்தார். 15.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறி வருகிறது. 

நிஷாங்கா- 4, திமுத் கருணாரத்னே- 29, குசால் மெண்டிஸ்- 4, தினேஷ் சண்டிமால்- 1 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். தற்போது 16 ஓவர் முடிவில் இலங்கை அணி 58/4 ரன்கள் எடுத்துள்ளது. 

தனஞ்செய டி சில்வா 4* ரன்களுடனும் மேத்வ்ஸ் 8* ரன்களுடன் களத்தில் இருக்கின்றனர். பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ஃரிடி 3 விக்கெட்டுகளும் நசீம் ஷா  1விக்கெட்டும் எடுத்து அசத்தியுள்ளனர். பாகிஸ்தானின் வேகப் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் இலங்கை அணியினர் திணறி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்ட்ரிஃப் மருந்து உற்பத்தி நிறுவனம், மருத்துவர் மீது வழக்குப் பதிவு

பிக் பாஸ் 9: 20 போட்டியாளர்கள் - முழு விவரம்!

கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட இருவா் கைது

தண்டரை ஊராட்சியில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கக் கோரிக்கை

3 நாள்களில் ரூ. 235 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் -1

SCROLL FOR NEXT