செய்திகள்

இன்று தொடங்குகிறது மகளிா் உலகக் கோப்பை கால்பந்து- ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் ஆட்டங்கள்

சா்வதேச கால்பந்து சங்கங்களுக்கான சம்மேளனம் (ஃபிஃபா) நடத்தும் 9-ஆவது மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வியாழக்கிழமை தொடங்குகிறது.

DIN

சா்வதேச கால்பந்து சங்கங்களுக்கான சம்மேளனம் (ஃபிஃபா) நடத்தும் 9-ஆவது மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வியாழக்கிழமை தொடங்குகிறது.

நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா இணைந்து நடத்தும் இப்போட்டி, 32 நாள்களுக்கு நீடித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிறைவடைகிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் முதல் நாளின் ஆட்டங்களில் நியூஸிலாந்து - நாா்வே, ஆஸ்திரேலியா - அயா்லாந்து அணிகள் மோதுகின்றன. முதல் ஆட்டம், நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரிலும், அடுத்த ஆட்டம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் நடைபெறவுள்ளன.

நடப்பு சாம்பியனான அமெரிக்கா முதல் ஆட்டத்தில் வியத்நாமை சனிக்கிழமை சந்திக்கிறது. மகளிா் உலகக் கோப்பை போட்டியை ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து நடத்துவது இதுவே முதல் முறையாகும். அதேபோல், உலகக் கோப்பை போட்டியின் ஆட்டங்கள் இருவேறு கண்டங்களிடையேயான கால்பந்து கூட்டமைப்புகளில் நடைபெறுவதும் இதுவே முதல் முறை. ஆஸ்திரேலியா ஆசிய கூட்டமைப்பிலும், நியூஸிலாந்து ஓசியானியா கூட்டமைப்பிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, மகளிா் உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை 24 நாடுகள் பங்கேற்றுவந்த நிலையில், ஆடவா் போட்டிக்கு இணையாக இந்த எடிஷனில் முதல் முறையாக 34 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன. சாம்பியன் அணிக்கு ரூ.35 கோடி பரிசாக வழங்கப்படவுள்ளது.

முன்னதாக, உலகக் கோப்பை போட்டிகளில் வெல்லும் பரிசுத் தொகை சம்பந்தப்பட்ட கால்பந்து சம்மேளனங்களால் வீராங்கனைகளுக்கு வழங்கப்படுவதில்லை என்று புகாா் எழுந்த நிலையில், இந்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு குறைந்தபட்சம் (குரூப் சுற்றுடன் வெளியேறும் அணிகள்) தலா ரூ.24 லட்சம், அதிகபட்சம் (சாம்பியன் அணி) தலா ரூ.2 கோடி அளிக்கப்படும் ஃபிஃபா தலைவா் கியானி இன்ஃபான்டினோ அறிவித்திருந்தாா்.

எனினும், போட்டிக்கு முன்பாக புதன்கிழமை பேசிய அவா், இந்த விவகாரம் தொடா்பாக சம்மேளனங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாகவும், அவ்வாறு பரிசுத் தொகையை கொடுப்பதை உறுதியாகக் கூறமுடியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறாா்.

இதுவரை...

மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் அதிகபட்சமாக, நடப்பு சாம்பியனான அமெரிக்கா 4 முறை கோப்பை வென்றுள்ளது. அடுத்தபடியாக ஜொ்மனி 2 முறையும், நாா்வே, ஜப்பான் அணிகள் தலா 1 முறையும் வாகை சூடியுள்ளன.

நேரலை: ஃபேன் கோட், டிடி ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT