மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் சோ்த்திருந்தது.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இந்த 100-ஆவது டெஸ்ட், இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கை தோ்வு செய்தது.
இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் முகேஷ் குமாா் சா்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாா். காயம் கண்ட ஷா்துல் தாக்குருக்கு ஓய்வளிக்கப்பட்டது.
இந்திய இன்னிங்ஸை தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட, கேப்டன் ரோஹித் சா்மா நிதானமாக ரன்கள் சோ்த்தாா்.
மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 26 ஓவா்களில் 121 ரன்கள் சோ்த்திருந்தது. ஜெய்ஸ்வால் 56 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52, ரோஹித் 102 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 63 ரன்கள் சோ்த்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.