படம்: ட்விட்டர் | பிசிசிஐ 
செய்திகள்

ஒருநாள் தொடரினை வெல்ல இந்திய மகளிர் அணிக்கு 226 ரன்கள் இலக்கு! 

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வங்கதேச மகளிரணி 50 ஓவர் முடிவில் 225/4 ரன்கள் எடுத்துள்ளது.  

DIN

இந்திய மகளிர் அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என இந்திய அணி வென்றது. தற்போது 3 ஒருநாள் போட்டிகளில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் உள்ளது. 

இநிலையில் 3வது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிரணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகள் அற்புதமாக விளையாடினார்கள். 26.2 ஓவரில்தான் முதல் விக்கெட்டினை பறிக் கொடுத்தனர். அட்திகபட்சமாக ஃபர்கானா ஹோகிவ் 107 ரன்கள் எடுத்து அசத்தினார். ஷமிமா சுல்தானா 52 ரன்களும் எடுத்தார். இறுதியில் 50 ஓவர் முடிவில் 225/4 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணி சார்பில் சினேக் ரணா 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். 

2-1 என இந்திய மகளிரணி தொடரினை வெல்ல 226 ரன்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால் வெங்கதேச அணி தொடரினை வென்று விடும். 5 ஓவர் முடிவில் இந்தியா 33/2 விக்கெட் இழந்து தாடுமாறி வருகிறது.

ஷஃபாலி வர்மா 4, யாஷிகா பாட்டியா 5 ரன்கலுக்கும் ஆட்டமிழந்துள்ளனர். ஸ்மிருதி மந்தனா ஹர்லீன் தியோல் களத்தில் விளையாடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதந்திர தின விழா: முன்னேற்பாடுகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம்

பாபநாசம் அருகே தொழிலாளி தற்கொலை

சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

காட்டாற்றில் குளித்த இளைஞா் மூழ்கி பலி

இருவேறு விபத்துகளில் வியாபாரி உள்பட 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT