செய்திகள்

ஆஷஸ் கடைசி டெஸ்ட்: உணவு இடைவேளைக்கு முன்பாக ஆஸ்திரேலியா 115 ரன்கள் குவிப்பு!

ஆஷஸ் கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா உணவு இடைவேளைக்கு முன்னதாக 2 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் குவித்துள்ளது.

DIN

ஆஷஸ் கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா உணவு இடைவேளைக்கு முன்னதாக 2 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் மற்றும் டோட் முர்பி தலா 2  விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டினை இழந்து 61 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா மற்றும் லபுஷேன் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 28) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா உணவு இடைவேளைக்கு முன்பு வரை 115 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

உணவு இடைவேளைக்கு முன்னதாக ஆஸ்திரேலியா இங்கிலாந்தைக் காட்டிலும் 168 ரன்கள் பின் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT