செய்திகள்

அறிமுகப் போட்டியில் அதிவேக அரைசதம்: சாதனை படைத்த மே.இ. தீவுகள் அணி வீரர்! 

DIN

ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)  சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை மேற்கிந்திய தீவுகள் அணி 3-0 என வெற்றி பெற்றுள்ளது. இதன் கடைசிப் போட்டியில் யுஏஇ 184க்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 35.1 ஓவரில் மே.இ.தீவுகள் அணி 185/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் அலிக் அத்தானாஸ் முதன்முறையாக விளையாடினார். 72 பந்துகளில் அரைசதமடித்தார். முதல் 11 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். பின்னர் 26 பந்துகளில் அதிவேகமாக அரைசதமடித்தார். அடுத்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார் . பிராண்டன் கிங் தொடர்நாயகன் விருது பெற்றார். 

இதற்கு முன்பாக அறிமுக ஒருநாள் போட்டியில் க்ருணால் பாண்டியா (இந்தியா) 2021இல் 26 பந்துகளில் அரைசதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதன்மூலம் க்ருணால் பாண்டியா சாதனையை சமன் செய்துள்ளார் அலிக். டி20 , டெஸ்ட் போட்டிகளில் அவரது அறிமுகப் போட்டிகாக மே.இ.தீவுகள் அணி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

அறிமுகப் போட்டியில் அதிவேக அரை சதமடித்தவர்கள் பட்டியல்: 

அலிக் அத்தானாஸ் - 26 பந்துகளில் 
க்ருணால் பாண்டியா - 26 பந்துகளில் 
இஷான் கிஷன் - 33 பந்துகளில் 
ஆர் புட்சர் - 35 பந்துகளில் 
ஜே மோரிஸ் - 35 பந்துகளில் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT