செய்திகள்

ஹர்பஜனுக்கு தோனி மீது பொறாமை: ஹர்பஜனை வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்! 

முன்னாள் இந்திய கேப்டன் தோனி மீது ஹர்பஜன் கூறிய குற்றச்சாட்டிற்கு அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். 

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 10 வருடங்களாக இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் சமூக வலைதலங்களில் தோனியை புகழ ஆரம்பித்தனர். 

இதில் ஹர்பஜன் சிங் தோனி ஒருவரால் மட்டும் கோப்பைகள் வெல்ல முடியாதென பதிவிட்டு இருந்தார். இதற்கு தோனி ரசிகர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

2007ஆம் ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையில் வென்றது. இதில் கடைசி ஓவரை ஹர்பஜனுக்கு தராமல் ஜோகிந்தர் சர்மாவிற்கு தோனி கொடுப்பார். அதில் வெற்றியும் பெற்றார். பின்னர் தோனி தலைமையில் 2011இல் ஒருநாள் கோப்பையும் 2013இல் சாம்பியன்ஷ் டிராபி வென்றதும் குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைதளங்களில் ஹர்பஜனை பலரும் விமர்சித்தும் கிண்டல் செய்தும் வருகின்றனர். “2007ல் ஹர்பஜனுக்கு ஓவர் கொடுக்காததால்தான் இப்படி செய்கிறாரோ?” எனவும்  “ஹர்பஜன் பாம்பு போன்றவர்” எனவும்  “தோனி மீது ஹர்பஜனுக்கு பொறாமை” எனவும் கிண்டல் செய்து வருகின்றனர். பழைய ட்விட்டுகளை எடுத்து இதென்ன முரண் என கிண்டல் செய்கின்றனர். 

தோல்விகளுக்கு நான்தான் காரணமென தோனி முன்னர் கூறிய பதிவை ரசிகர்கள் பகிர்ந்து, “இதுதான் தோனி. தோனி வீட்டிற்கு ரசிகர்கள் கல்லெறிந்தது கூட அவருக்கு மட்டுமே நடந்தது. அதனால் புகழ் வந்தால் மட்டும் ஏன் பங்கிற்கு வருகிறீர்கள்” எனவும் “இந்தமாதிரி ஆள்களோடு தோனி எப்படிதான் டக்கவுட்டில் இருந்தாரோ!”  கமெண்டில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்கத்தில் வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு! பலர் மாயம்

மேட்டூர் அணை நிலவரம்

தலைநகரில் செவ்வாய்க்கிழமை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த அன்புமணி

ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 6 நோயாளிகள் பலி

SCROLL FOR NEXT