செய்திகள்

ஆகஸ்டில் ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான், இலங்கையில் நடத்தப்படும் என அறிவிப்பு!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 வரை நடைபெற உள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

DIN

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 வரை நடைபெற உள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்தியா , பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய 6  அணிகள் இந்த ஆசியக் கோப்பையில் பங்கேற்கின்றன. இந்த 6 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று முடிவில் 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

ஆசியக் கோப்பையில் மொத்தமுள்ள 13 போட்டிகளில் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், 9 போட்டிகள் இலங்கையிலும் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் நடக்கவிருந்த நிலையில் இந்தியா மறுப்பு தெரிவித்ததால் இலங்கையிலும் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT