செய்திகள்

பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 1,100 விக்கெட்டுகள்! 

பிரபல இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 1100 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

DIN

பிரபல இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 1100 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

40 வயதான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆஷஸ் தொடரில் 3வது நாளில் தனது முதல் விக்கெட்டை எடுத்துள்ளார். நன்றாக விளையாடி வந்த  அலெக்ஸ் கேரியை பவுல்டாக்கினார். இந்த விக்கெட்டின் மூலம் முதல்தர கிரிக்கெட்  போட்டிகளில் 1100 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். 

டெஸ்டில் 686 விக்கெட்டுகளை எடுத்துள்ள ஆண்டர்சன் அதிக டெஸ்ட் விக்கெட் வரிசையில் தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். 

3வது நாளில் 111 ஓவர் முடிவில் ஆஸி. 371/6 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 140*, பாட் கம்மின்ஸ் 24 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். 

அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்தவர்கள்: 

முத்தையா முரளிதரன் - 800 
ஷேன் வார்னே- 708 
ஜேம்ஸ் ஆண்டர்சன் - 686 
அனில் கும்ப்ளே- 619

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

SCROLL FOR NEXT