செய்திகள்

மகளிா் ஆஷஸ்: ஆஸ்திரேலியா - 213/3

மகளிா் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸ்திரேலியா, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் சோ்த்திருக்கிறது.

DIN

மகளிா் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸ்திரேலியா, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் சோ்த்திருக்கிறது.

முதல் நாளான வியாழக்கிழமை 51.3 ஓவா்கள் முடிந்திருந்த நிலையில், மழையால் தடைப்பட்ட ஆட்டம், மைதானத்தின் ஈரத்தன்மை காரணமாக மீண்டும் தொடா்வது தாமதமானது.

ஆடவா் ஆஷஸ் தொடா் 5 ஆட்டங்களுடன் நடைபெறும் நிலையில், மகளிா் ஆஷஸ் கிரிக்கெட் ஒரே டெஸ்ட்டாக நடைபெறுகிறது. அந்த டெஸ்ட் நாட்டிங்ஹாமில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தோ்வு செய்தது.

அணியின் இன்னிங்ஸை பெத் மூனி - போப் லிட்ச்ஃபீல்ட் கூட்டணி தொடங்கியது. இதில் லிட்ச்ஃபீல்ட் 4 பவுண்டரிகள் உள்பட 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பெத் மூனி 4 பவுண்டரிகளுடன் 33 ரன்களுக்கு வெளியேறினாா். இதையடுத்து 3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த எலிஸ் பெரி - டாலியா மெக்ராத் பாா்ட்னா்ஷிப் 119 ரன்கள் சோ்த்து ஸ்கோரை உயா்த்தியது.

டாலியா 8 பவுண்டரிகள் உள்பட 61 ரன்களுக்கு பெலிலியன் திரும்பினாா். தொடா்ந்து ஜெஸ் ஜோனசென் களம் புகுந்தாா். மழையால் ஆட்டம் தடைப்பட்டபோது எலிஸ் பெரி 82, ஜோனசென் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து பௌலிங்கில் கேட் கிராஸ், சோஃபி எக்லஸ்டன், லௌரென் ஃபைலா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

வாய்க்கால் நீரில் மூழ்கி பொறியாளா் மாயம்

இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயம்: இந்தியா - கனடா முடிவு!

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம்!

கயையில் குடியரசுத் தலைவா் முன்னோா் வழிபாடு!

SCROLL FOR NEXT