செய்திகள்

304 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வரலாற்று வெற்றி! 

உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. 

DIN

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான குவாலிஃபையா் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இதில்  8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.  இதில் அமெரிக்காவிற்கு எதிரான இன்றையப் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வரலாற்று வெற்றி பெற்றது. 

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 408 ரன்கள் எடுத்தது. முதன்முறையாக 400க்கு மேலாக அடித்தது ஜிம்பாப்வே அணி. இதில் தொடக்க வீரர் ஜே கும்ப்ளே 78 ரன்களும் எடுத்த ஆட்டமிழந்தார். பின்னர் ஆடிய கேப்டன் ஷான் வில்லியம்ஸ் 174 ரன்கள் எடுத்து அசத்தினார். சிக்கந்தர் ராஸா 27 பந்துகளில் 48 ரன்களும் ரியான் ப்ரூள் 16 பந்துகளில் 47 ரன்களும் எடுத்து அசத்தினர்.  

கேப்டன் ஷான் வில்லியம்ஸ் 174 ரன்கள் எடுத்து அசத்தினார்

அடுத்து ஆடிய யுஎஸ்ஏ அணி 25.1 ஓவரில் 104 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்தது. 3 ரன்னவுட்கள் செய்து அசத்தினர் ஜிம்பாப்வே அணியினர். சிக்கந்தர் ராஸா, ரிச்சர்ட் கராவா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். 

இந்த குவாலிஃபையா் லீக் போட்டியில் ஜிம்பாப்வே 4 போட்டிகளிலும் வென்று அடுத்த சுறுக்கு தகுதி பெற்றுள்ளது. யுஎஸ்ஏ நான்கிலும் தோற்று வெளியேறியுள்ளது. 

மேலும், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில்  இதுதான் 2வது அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி பெறும் வெற்றியாகும். முதலிடத்தில் இந்திய  அணி (317 ரன்கள்) உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

ஐஎல்டி20 ஏலத்தில் விலைபோகாத அஸ்வின்.. பிபிஎல் தொடர் முழுவதும் விளையாட முடிவு!

கரூர் பலியில் அரசியல் ஆதாயம் தேடுவது விஜய்தான் - Thirumavalavan

அதிவேகமாக 50 கோல்கள் அடித்த எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸி சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு!

மத்திய அரசு நிதி விடுவிப்பு! இலவச கட்டாயக் கல்வி சேர்க்கை தொடங்கப்படும்!

SCROLL FOR NEXT