ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் சின்னமாக அனுமன் உருவம் இருப்பதைப் போன்ற வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. விளையாட்டிலும் மதத்தை திணிக்கும் முயற்சியை இது வெளிப்படுத்துவதாக பலர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
2023ஆம் ஆண்டுக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் தாய்லாந்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கு அதிகாரப்பூர்வமாக புதிய சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சின்னம் ஹிந்து கடவுளான அனுமன் சாயலில் இருப்பதாக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் மட்டுமின்றி தாய்லாந்து கலாசாரத்திலும் அனுமன் வழிபாடு பரவலாக உள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் வாட் ஃபிரா கவ் பகுதியிலுள்ள சுவரோவியங்களில் அனுமன் ஓவியங்கள் காணப்படுகின்றன. தாய்லாந்து மொழியில் தழுவி எழுதப்பட்ட ராமாயணத்திலும் அனுமன் கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. இதனால் தாய்லாந்து நாட்டில் பள்ளிக் கல்வியிலும் அனுமன் குறித்து தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
தாய்லாந்தில் இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் சார்பில் நடைபெற்ற தற்காப்பு கலைக்கான போட்டியிலும் அனுமன் சின்னம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.