செய்திகள்

புதிய சாதனை: கபில் தேவை முந்திச் சென்ற அஸ்வின்!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில்...

DIN

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின்.

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஒரு புதிய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் கபில் தேவைப் பின்னுக்குத் தள்ளி 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் அஸ்வின். கபில் தேவ் 687 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் 689 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் அஸ்வின். அனில் கும்ப்ளே 953 விக்கெட்டுகளும் ஹர்பஜன் சிங் 707 விக்கெட்டுகளும் எடுத்து முதல் இரு இடங்களில் உள்ளார்கள்.

அதிக சர்வதேச விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள்

953 (499 இன்னிங்ஸ்) - அனில் கும்ப்ளே 
707 (442) - ஹர்பஜன் சிங் 
689* (347) - அஸ்வின் 
687 (448) - கபில் தேவ் 
597 (373) - ஜாகீர் கான் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT