சென்னையில் எம்.எஸ். தோனி 
செய்திகள்

சென்னையில் தோனி! இன்றுமுதல் இளம் வீரர்களுடன் பயிற்சி!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி சென்னை நேற்று இரவு (மார்ச் 2) வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

DIN


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி சென்னை நேற்று இரவு (மார்ச் 2) வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மகளிர் ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி முடிவடையும் நிலையில் நான்கு நாட்கள் இடைவெளியில் ஆடவர் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது.

ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில், சென்னை அணியின் கேப்டன் தோனியின் கடைசி சீசன் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த முறை முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. 

தனது கடைசி ஐபிஎல் போட்டி சென்னையில் தான் இருக்கும் என்று தோனி வெளிப்படையாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அவர் சென்னைக்கு பயிற்சிக்காக வருகை புரிந்துள்ளார். 

அம்பத்தி ராயுடு, தீபக் சஹார், ரஹானே ஆகியோர் சென்னையில் ஏற்கெனவே பயிற்சியை தொடங்கியுள்ளனர். அவர்களுடன் தோனியும் பயிற்சியில் ஈடுபடவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT