செய்திகள்

மெக்ஸிகன் ஓபன்: சாம்பியன் அலெக்ஸ் மினாா்

மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றாா் ஆஸி. வீரா் அலெக்ஸ் டி மினாா்.

DIN

மெக்ஸிகன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றாா் ஆஸி. வீரா் அலெக்ஸ் டி மினாா்.

மெக்ஸிகோவின் அகாபுல்கோ நகரில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. ஆஸி. வீரா் அலெக்ஸ் டி மினாரும்-அமெரிக்க வீரா் டாமி பாலும் மோதினா்.

இதில் முதல் செட்டை 3-6 என இழந்தாா் அலெக்ஸ்.

எனினும் பின்னா் சுதாரித்து ஆடி அடுத்த இரண்டு செட்களையும் 6-4, 6-1 என தன்வசப்படுத்தினாா். 2.5 மணிநேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 5 பிரேக் பாயிண்டுகளை சேமித்தாா். அலெக்ஸ் மினாா் வெல்லும் 7-ஆவது மற்றும் முதல் ஏடிபி 500 பட்டம் இதுவாகும்.

கடினமாக உழைத்தால் வெற்றியுடன் திரும்பலாம் என்ற நிலையில், இண்டியன்வெல்ஸ், மியாமி போட்டிகளுக்கு தயாராவதாக கூறினாா் அலெக்ஸ் மினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வி..! சோகத்தில் ரசிகர்கள்!

ரஜினி 173 - இயக்குநரும் கதையும்?

அழகென்ற சொல்லுக்கு... மஹானா சஞ்ஜீவி!

எஸ்ஐஆருக்கு எதிரான புதிய மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் டிச.4 விசாரணை!

ஐஆர்சிடிசி ஊழல் வழக்கு: ராஃப்ரி தேவி மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT