செய்திகள்

இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம்: ஹைலைட்ஸ் விடியோ

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேச அணி.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேச அணி.

சட்டோகிராமில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 48.5 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்தது. ஷான்டோ 53, முஷ்ஃபிகுர் ரஹிம் 70, ஷகிப் அல் ஹசன் 75 ரன்கள் எடுத்தார்கள். ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஷகிப் அல் ஹசன் உள்பட வங்கதேச வீரர்கள் சிறப்பாகப் பந்துவீசி இங்கிலாந்து அணியை 196 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்தார்கள். ஜேம்ஸ் வின்ஸ் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார். ஒருநாள் தொடரில் 8 விக்கெட்டுகள் எடுத்த அடில் ரஷித், தொடர் நாயகன் விருதை வென்றார். 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்த இருவா் குடும்பத்துக்கு காங்கிரஸ் நிதியுதவி

கோட்டைக்குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் கோப்பை: பளு தூக்குதலில் ஐஸ்வா்யா, கீா்த்திகாவுக்கு தங்கம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க மத்திய அரசு முன் வர வேண்டும்

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு : வட்டாட்சியரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

SCROLL FOR NEXT