நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை, முதல் நாளான வியாழக்கிழமை முடிவில் 75 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ரன்கள் சோ்த்திருந்தது.
டாஸ் வென்ற நியூஸிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, இலங்கை பேட்டிங்கில் ஓஷதா ஃபொ்னாண்டோ 13, கேப்டன் திமுத் கருணாரத்னே 7 பவுண்டரிகளுடன் 50, குசல் மெண்டிஸ் 16 பவுண்டரிகளுடன் 87, ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 47, தினேஷ் சண்டிமல் 6 பவுண்டரிகளுடன் 39, நிரோஷன் டிக்வெல்லா 7 ரன்களுடன் ஆட்டமிழந்தனா்.
நாளின் முடிவில் தனஞ்ஜெய டி சில்வா 39, காசன் ரஜிதா 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். நியூஸிலாந்து பௌலிங்கில் டிம் சௌதி 3, மாட் ஹென்றி 2, மைக்கேல் பிரேஸ்வெல் 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.