செய்திகள்

சிஎஸ்கே அணியில் பிறந்த நாள் கொண்டாட்டம்! (விடியோ)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் எரிக் சிமன்ஸின் பிறந்த நாள் கொண்டாட்ட விடியோ வெளியாகியுள்ளது.

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் எரிக் சிமன்ஸின் பிறந்த நாள் கொண்டாட்ட விடியோ வெளியாகியுள்ளது.

மார்ச் 31 அன்று தொடங்கும் ஐபிஎல் 2023 போட்டி மே 28 அன்று நிறைவுபெறுகிறது. ஆமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இறுதி ஆட்டமும் ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை, ஆமதாபாத், மொஹலி, லக்னெள, ஹைதராபாத், பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவாஹாட்டி, தரம்சாலா ஆகிய நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

குரூப் ஏ பிரிவில் மும்பை, கேகேஆர், ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் சென்னை, சன்ரைசர்ஸ், பஞ்சாப், ஆர்சிபி, குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. 

ஏப்ரல் 3 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லக்னெள அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. இதனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடவுள்ளது. சென்னையில் கடைசியாக விளையாடி ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவேன் என தோனியும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். சிஎஸ்கே அணியின் ஆட்டங்கள் சென்னையில் ஏப்ரல் 3, ஏப்ரல் 12, ஏப்ரல் 21, ஏப்ரல் 30, மே 6, மே 10, மே 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. 

ஐபிஎல் போட்டிக்காக சென்னைக்கு வந்துள்ள தோனியும் இதர சிஎஸ்கே வீரர்களும் தங்களுடைய பயிற்சியை ஆரம்பித்துள்ளார்கள். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் உதவிப் பயிற்சியாளர் எரிக் சிமன்ஸின் பிறந்த நாள் கொண்டாட்ட விடியோவை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜேந்திரபாலாஜி மீதான பண மோசடி வழக்கு: குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

ராஜாசாப் புதிய வெளியீட்டுத் தேதி!

நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

SCROLL FOR NEXT