ஹர்ஷல் படேல் (நடுவில்) 
செய்திகள்

தினமும் மூன்று, நான்கு முறை அழுதேன்: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

32 வயது ஹர்ஷல் படேல் இந்திய அணிக்காக இதுவரை 25 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

DIN

கடந்த வருடம் தனது சகோதரி இறந்தபோது தினமும் மூன்று, நான்கு முறை அழுததாகப் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்ஷல் படேல் கூறியுள்ளார்.

32 வயது ஹர்ஷல் படேல் இந்திய அணிக்காக இதுவரை 25 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி வீரராக உள்ளார். ஐபிஎல் 2021 போட்டியில் 32 விக்கெட்டுகள் எடுத்தார். 

இந்நிலையில் ஆர்சிபி அணியின் பாட்காஸ்ட் சீசன் 2-ல் அவர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

என்னுடைய சகோதரி இறந்தபோது ஒரு வருடம் நான் சோகத்தில் இருந்தேன். 2022 ஏப்ரல் மாதத்தில் இறந்தார். நான் அப்போது (ஐபிஎல் போட்டிக்காக) தனிமைப்படுத்தப்பட்டிருந்தேன். ஊரில் இருந்த என்னுடைய உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஊருக்குச் சென்று அனைவரையும் கட்டி அணைத்து அழவேண்டும் போல இருந்தது. ஆனால் எங்கள் சோகத்தை செல்பேசி வழியாகவே பரிமாறிக் கொண்டோம். அதுதான் எங்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பாக இருந்தது. ஏழு நாள்கள் கழித்து என்னுடைய பையன் பிறந்தான். அப்போது சோகமாக இருக்க வேண்டுமா, மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா எனத் தெரியாமல் இருந்தேன். என்னுடைய விடுதி அறையில் தினமும் மூன்று, நான்கு முறை அழுத நேரங்களும் உண்டு. என் மகனை ஃபேஸ்டைம் செயலியில் பார்த்த பிறகு சந்தோஷமாக இருக்கும் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT