முகப்பு
டாம் லதம் (கோப்புப் படம்)
செய்திகள்

இலங்கை - நியூசிலாந்து டெஸ்ட்: ஆவலுடன் கவனிக்கும் இந்திய ரசிகர்கள்!

ஆமதாபாத்தில் மட்டுமல்லாமல் கிறைஸ்ட்சர்ச்சிலும் என்ன நடக்கிறது என்பதை இந்திய ரசிகர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள்.  

செய்திகள்

இலங்கை - நியூசிலாந்து டெஸ்ட்: ஆவலுடன் கவனிக்கும் இந்திய ரசிகர்கள்!

ஆமதாபாத்தில் மட்டுமல்லாமல் கிறைஸ்ட்சர்ச்சிலும் என்ன நடக்கிறது என்பதை இந்திய ரசிகர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள்.  

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:43 AM
டாம் லதம் (கோப்புப் படம்)
பகிர்:

ஆமதாபாத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டை இந்திய அணி வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். டிரா செய்தாலே தோற்றாலோ இலங்கையின் தயவு தேவைப்படும்.

அதாவது நியூசிலாந்தில் இரு டெஸ்டுகளில் விளையாடுகிறது இலங்கை அணி. இந்த இரு டெஸ்டுகளிலும் இலங்கை அணி வென்று, ஆமதாபாத் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறாமல் போனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இலங்கை தகுதி பெற்றுவிடும்.

இதனால் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் இலங்கை - நியூசிலாந்து டெஸ்டின் முடிவை அறிய இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளார்கள். இந்த டெஸ்டில் இலங்கை தோற்றாலோ அல்லது ஆட்டம் டிரா ஆனால் கூட போதும். இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.

கிறைஸ்ட்சர்ச்சில் 3-வது நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 355 ரன்களும் நியூசிலாந்து அணி 373 ரன்களும் எடுத்துள்ளன. 3-ம் நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.

அடுத்த இரு நாள்களிலும் ஆமதாபாத்தில் மட்டுமல்லாமல் கிறைஸ்ட்சர்ச்சிலும் என்ன நடக்கிறது என்பதை இந்திய ரசிகர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள்.  

முழு கட்டுரையைப் படிக்க →