முகப்பு
செய்திகள்

ஐபிஎல் 2023: 10 அணிகளின் கேப்டன்கள் பட்டியல்!

மார்ச் 31 அன்று தொடங்கும் ஐபிஎல் 2023 போட்டி மே 28 அன்று நிறைவுபெறுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

தில்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டதையடுத்து ஐபிஎல் 2023 போட்டியில் அனைத்து அணிகளுக்குமான கேப்டன்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். 

மார்ச் 31 அன்று தொடங்கும் ஐபிஎல் 2023 போட்டி மே 28 அன்று நிறைவுபெறுகிறது. ஆமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இறுதி ஆட்டமும் ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை, ஆமதாபாத், மொஹலி, லக்னெள, ஹைதராபாத், பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவாஹாட்டி, தரம்சாலா ஆகிய நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

குரூப் ஏ பிரிவில் மும்பை, கேகேஆர், ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் சென்னை, சன்ரைசர்ஸ், பஞ்சாப், ஆர்சிபி, குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸி. பேட்டர் டேவிட் வார்னர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து 10 ஐபிஎல் அணிகளுக்கான கேப்டன்களின் பட்டியல் உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் 2023: அணிகளின் கேப்டன்கள்

குஜராத் - பாண்டியா
சிஎஸ்கே - தோனி  
மும்பை - ரோஹித் சர்மா  
சன்ரைசர்ஸ் - மார்க்ரம் 
தில்லி - டேவிட் வார்னர் 
ஆர்சிபி - டு பிளெஸ்சிஸ் 
கேகேஆர் - ஷ்ரேயஸ் ஐயர் 
ராஜஸ்தான் - சஞ்சு சாம்சன்  
லக்னெள - கே.எல். ராகுல் 
பஞ்சாப் கிங்ஸ் - ஷிகர் தவன்  
 

முழு கட்டுரையைப் படிக்க →