வில் ஜாக்ஸ் 
செய்திகள்

இங்கிலாந்து பேட்டர் விலகல்: எந்த வீரரைத் தேர்வு செய்யப் போகிறது ஆர்சிபி?

ஐபிஎல் 2023 போட்டியிலிருந்து ஆர்சிபி அணியைச் சேர்ந்த இங்கிலாந்து பேட்டர் வில் ஜாக்ஸ் விலகியுள்ளார்.

DIN

ஐபிஎல் 2023 போட்டியிலிருந்து ஆர்சிபி அணியைச் சேர்ந்த இங்கிலாந்து பேட்டர் வில் ஜாக்ஸ் விலகியுள்ளார்.

கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 24 வயது இங்கிலாந்து பேட்டர் வில் ஜாக்ஸை ரூ. 3.2 கோடிக்குத் தேர்வு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. எனினும் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்ற வில் ஜாக்ஸ் காயமடைந்தார். இதனால் ஐபிஎல் 2023 போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். சமீபத்தில் பாகிஸ்தானில் டெஸ்ட், டி20 கிரிக்கெட்டுக்கும் வங்கதேசத்தில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் அறிமுகமானார் வில் ஜாக்ஸ். 

இதையடுத்து நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல்லை அணியில் சேர்க்க முயன்று வருகிறது ஆர்சிபி நிர்வாகம். ஐபிஎல் போட்டியில் இதற்கு முன்னால் பிரேஸ்வெல் விளையாடியதில்லை. ஏலத்திலும் எந்த அணியும் அவரைத் தேர்வு செய்யவில்லை. இதனால் இந்த வருடம் ஆர்சிபி அணிக்குத் தேர்வாகி ஐபிஎல் போட்டியில் பிரேஸ்வெல் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

ரீவைண்ட்... அருண் விஜய்!

குல்தீப் 5 விக்கெட்டுகள்: 248 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீ!

SCROLL FOR NEXT