ஆர்சிபி அணியில் கேதார் ஜாதவ்!
ஆர்சிபிக்கு அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் கேதார் ஜாதவ்.
38 வயதான கேதார் ஜாதவ் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர். இதுவரை ஐபிஎல்லில் 93 போட்டிகளில் விளையாடியுள்ளார். 123 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடக்கூடியவர். ஸ்பின்னராகவும் பந்து வீசுவார்.
இந்தாண்டு மஹாராஷ்டிரா அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் 555 ரன்களை எடுத்தார். சராசரி 92.50 என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னாள் சிஎஸ்கே வீரர். ஏற்கனெவே ஆர்சிபி அணிக்காகவும் விளையாடியுள்ளார். தற்போது மராத்தி மொழியில் கமெண்ட்ரி செய்து வருகிறார்.
இந்நிலையில், ஆர்சிபியில் டேவிட் வில்லிக்கு பதிலாக கேதார் ஜாதவை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.