செய்திகள்

ஆர்சிபி அதிரடி பேட்டிங்: மும்பைக்கு 200 ரன்கள் இலக்கு!

மும்பைக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 199 ரன்கள் எடுத்துள்ளது. 

DIN

விராட் கோலி தொடக்கத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தாலும் டு பிளெஸ்ஸி, மேக்ஸ்வெல் ஜோடி அற்புதமாக விளையாடினர். அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 68 ரன்களும், டு பிளெஸ்ஸி 65 ரன்களும் எடுத்தனர். 

இறுதியில் தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 30 ரன்கள் அடித்து அசத்தினார். 20 ஓவர் முடிவில் 199/6 ரன்கள் எடுத்தது. 

மும்பை சார்பில் ஜேசன் பெஹரென்டராப் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். க்ரீன், ஜோர்டன், குமார் கார்த்திகேயா தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர். 

புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணியும் 8வது இடத்திலிருக்கும் மும்பை அணியும் தலா 10 புள்ளிகளுடன் இருக்கிறது. இந்தப் போட்டியில் யார் வென்றாலும் 12 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு செல்வது உறுதியாகிவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT