செய்திகள்

மும்பைக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

DIN

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்கிறது. 

இதுவரை இரண்டு முறை குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை இந்தியன்ஸ் ஒருமுறையும், குஜராத் அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

இன்றையப் போட்டி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிக முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டுமா? வழிகாட்டும் ஆர்பிஐ

தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் நீக்கம்: உதயநிதி ஸ்டாலின்

திருப்பரங்குன்றம் மலை காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல அனுமதி!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய... எளிய வழி!

6 மாதங்களில் இரண்டாவது முறை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT