செய்திகள்

ஜெய்ஸ்வால் விரைவில் இந்திய அணியில் இடம்பெறுவார்: ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான யாசஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான யாசஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 98 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

ஜெஸ்ய்வாலின் இந்த அதிரடியான பேட்டிங் திறமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இடம்பெற வேண்டும் என தங்களது கோரிக்கைகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

ஜெய்ஸ்வாலின் அதிரடியான பேட்டிங்கைத் தொடர்ந்து ட்விட்டரில் அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரர்களான வீரேந்திர சேவாக், முகமது கைஃப், இர்ஃபான் பதான் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அதேபோல சூர்யகுமார் யாதவ், டேவிட் வார்னர், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT