செய்திகள்

கிளாசென், சமாத் அதிரடி: லக்னௌ அணிக்கு 183 ரன்கள் இலக்கு! 

DIN

புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் லக்னௌ அணிக்கும் 9வது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இந்தப் போட்டி முக்கியமானது. லக்னௌ வெற்றி பெற்றால் 4வது இடத்திற்கு முன்னேறும். ஹைதராபாத் வெற்றி பெற்றால் 6வது இடத்திற்கு முன்னேறலாம். 

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் 182/6 ரன்கள் எடுத்தது. இறுதியில் அதிரடியாக விளையாடிய கிளாசென் 47 ரன்களும் அப்துல் சமாத் 37 ரன்களும் எடுத்தனர்.

அனுமோல்ப்ரீத் சிங் 36 ரன்களும், ராகுல் த்ரிப்பாதி 20 ரன்களிலும் மார்க்ரம் 28 ரன்களும் அபிசேக் சர்மா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்த்த க்ளென் பிலிப்ஸ் டக் அவுட்டானார். 

லக்னௌ அணி சார்பாக கேப்டன் க்ருணால் பாண்டியா ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT