செய்திகள்

உம்ரான் மாலிக்கை ஹைதராபாத் ஒழுங்காக பயன்படுத்தவில்லை: முன்னாள் வீரர் குற்றச்சாட்டு! 

ஐபிஎல் 2023 தொடரின் அதிவேக பந்து வீச்சாளரை ஹைதராபாத் அணி ஒழுங்காக பயன்படுத்தவில்லை என முன்னாள் வீரர் குற்றம் சாட்டியுள்ளார். 

DIN

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின்போது உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது. லக்னௌ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய ஹைதராபாத் 182 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய லக்னௌ அணி 19.2 ஓவரில் 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

உம்ரான் மாலிக் இளம் வேகப்பந்து வீச்சாளர். 150 கி.மீ.க்கும் மேலான வேகத்தில் பந்து வீசக்கூடியவர். 24 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அவர் 29 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஒரு இன்னிங்ஸில் ஒரு முறை 5 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இறுதியில் நிகோலஸ் பூரன் 13 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து லக்னௌ அணியின் வெற்றிக்கு வித்திட்டார். கடைசியில் 16வது ஓவரை வீசிய அபிஷேக் ஷர்மாவின் ஓவரில் 5 சிக்ஸர்கள் ஆட்டத்தினை திருப்பியது. 

இது குறித்து பலரும் மோசமான கேப்டன்சி என கூறிவரும் நிலையில் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான இர்பான் பதான் கூறியதாவது: 

ஐபிஎல் தொடரின் அதிவேக பந்து வீச்சாளரை வெளியே உட்கார வைத்திருப்பது என்னை குழப்புகிறது. உம்ரான் மாலிக்கை ஹைதராபாத் அணி சரியாக கையாளவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரூராட்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் சோதனை: கணக்கில் வராத ரூ.5.80 லட்சம் பறிமுதல்

காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் அமலானால் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நீங்கும்: அமைச்சா் சக்கரபாணி

கிரிவல பக்தா்கள் வேன் கவிழ்ந்து விபத்து: 11 போ் காயம்

மாணவா்களின் படைப்பாற்றலை வளா்ப்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய சாராம்சம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

திமுகவிற்கு எதிராக ஓா் அணியில் நின்று நல்லாட்சி அமைப்பதே இன்றைய தேவை: கே.பி. ராமலிங்கம் அழைப்பு

SCROLL FOR NEXT