படம்: டிவிட்டர்/சென்னை சூப்பர் கிங்ஸ் 
செய்திகள்

ஓடிவந்து தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய கவாஸ்கர்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் மைதானத்துக்குள் ஓடிவந்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய காட்சி கிரிக்கெட் உலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் மைதானத்துக்குள் ஓடிவந்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய காட்சி கிரிக்கெட் உலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு சென்னை மற்றும் கொல்கத்தா அணி விளையாடிய லீக் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.

இந்த சீசனோடு தோனி ஓய்வுபெறும் என்று பேசப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு சென்னையில் சிஎஸ்கே விளையாடிய கடைசி லீக் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேற்று குவிந்தனர்.

நேற்றைய ஆட்டம் நிறைவடைந்த பிறகு, ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக கேப்டன் தோனி உள்ளிட்ட சென்னை அணி ரசிகர்கள் மைதானத்தை சுற்றி வலம்வந்து ரசிகர்களுக்கு பந்து, கையுறை உள்ளிட்டவை பரிசாக வழங்கினார்.

அப்போது, மைதானத்துக்குள் ஓடிவந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் வர்ணையாளருமான சுனில் கவாஸ்கர், தனது சட்டையில் கையெழுத்திடுமாறு தோனியிடம் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, சட்டையில் கையெழுத்திட்ட தோனி, அவரை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், தோனியிடம் கையெழுத்து வாங்கிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT