செய்திகள்

சதம் விளாசிய க்ளாசென்: பெங்களூருக்கு 187 ரன்கள் இலக்கு!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்துள்ளது.

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜுவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஹைதராபாத் முதலில் பேட் செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் ராகுல் திரிபாதி களமிறங்கினர். இந்த இணை சீராக ஆட்டத்தைத் தொடங்கினாலும் அபிஷேக் சர்மா 11 ரன்களிலும், ராகுல் திரிபாதி 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, கேப்டன் மார்கரம் மற்றும் ஹென்ரிச் க்ளாசென் ஜோடி சேர்ந்தனர். மார்கரம் நிதானமாக விளையாட க்ளாசென் அதிரடி காட்டினார். அவர் மைதானத்தின் நாலாபுறங்களிலும் பந்துகளை பறக்கவிட்டார். மார்கரம் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் க்ளாசெனும், ஹாரி ப்ரூக்கும் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக விளையாடிய க்ளாசென் சதம் விளாசினார். 49 பந்துகளில் அவர் சதத்தினைக் கடந்தார். அவர் 51 பந்துகளில் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். ஹாரி ப்ரூக் 27 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஹைதராபாத் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT