செய்திகள்

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சிஎஸ்கே: தில்லியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது!

DIN

தில்லி கேப்பிடல்ஸ் அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை மற்றும் தில்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். 

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே சார்பில் சிறப்பாக விளையாடிய டெவான் கான்வே 87 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக சென்னை சார்பில் ருதுராஜ் 79 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து, 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது தில்லி கேப்பிடல்ஸ். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். பிரித்வி ஷா 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பில் சால்ட் 3 ரன்களிலும், ரைலி ரூசோ 0 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேவிட் வார்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 58 பந்துகளில் 86 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய தில்லி வீரர்கள் யாரும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தில்லி அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சிஎஸ்கே சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீபக் சஹார் 3 விக்கெட்டுகளையும், தீக்‌ஷனா மற்றும் பதிரானா தலா 2 விக்கெட்டுகளையும், தேஷ்பாண்டே மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி இரண்டாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பினை உறுதி செய்தது. குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT