செய்திகள்

விசுவாசமான ரசிகர்களுக்கு நன்றி: கோலி உருக்கம்!

விசுவாசமான பெங்களூரு ரசிகர்களுக்கு நன்றி என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் விராட் கோலி உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.

DIN

விசுவாசமான பெங்களூரு ரசிகர்களுக்கு நன்றி என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் விராட் கோலி உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசி வரை போராடிய பெங்களூர் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தோற்றதால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இதன்மூலம், ஐபிஎல் கோப்பை வாங்கும் பெங்களூர் அணியின் கனவு மீண்டும் தகர்ந்தது.

இந்நிலையில், ரசிகர்களுக்கு நன்றி சொல்லி விராட் கோலி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“அருமையான தருணங்களை கொண்ட தொடராக அமைந்தாலும், இலக்கை அடைய முடியவில்லை. இது ஏமாற்றமாக அமைந்தாலும், தலைநிமிர்ந்து மீண்டும் பயணிப்போம். அனைத்து முயற்சிகளிலும் எங்களுக்கு துணையாக நின்ற விசுவாசமான ரசிகர்களுக்கு நன்றி.

பயிற்சியாளர்கள், அணி நிர்வாகம் மற்றும் எனது அணியின் வீரர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. மீண்டும் வலிமையாக திரும்புவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT