செய்திகள்

விராட் கோலி சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்? 

ஐபிஎல் போட்டியில் ஒரே சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை ஷுப்மன் கில் நிகழ்த்துவாரா என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். 

DIN

ஐபிஎல் போட்டி 2008 முதல் வருடம் ஒருமுறை நடந்து வருகிறது. உலகிலேயே மிகவும் முக்கியமான தொடராகவும் முன்னேறி வருகிறது. இந்த ஐபிஎல் போட்டியில் ஒரே சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். 2016இல் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 973 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 4 சதங்கள், 7 அரைசதங்கள் அடங்கும். சராசரி 81. ஸ்டிரைக் ரேட் 152 என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளார் குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த ஷுப்மன் கில். இதுவரை 851 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 சதங்களும், 5 அரைசதங்களும் அடங்கும். 

நாளை (மே.28) நடைபெறும் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணியுடன் குஜராத் அணி மோத உள்ளது. இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் 123 ரன்களை எடுத்தால் விராட் கோலியின் சாதனையை முறியடிக்கலாம். இந்த  சாதனையை ஷுப்மன் கில் நிகழ்த்துவாரா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்: 

  1. விராட் கோலி (ஆர்சிபி- 2016) - 973 
  2. ஜாஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்-2022) - 863 
  3. ஷுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்-2023)- 851 
  4. டேவிட் வார்னர் (ஹைதராபாத்- 2016) - 848 
  5. கேன் வில்லியம்சன் (ஹைதராபாத்- 2018)- 735 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT