செய்திகள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ருதுராஜிக்கு பதில் ஜெய்ஸ்வால்? 

ஐசிசி  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ருதுராஜிக்கு பதிலாக ஜெய்ஸ்வால் விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.  

DIN

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2-ஆவது எடிஷன் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம், வரும் ஜூன் 7 முதல் 11-ஆம் தேதி வரை லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் 12-ஆம் தேதி ‘ரிசா்வ்’ நாளாக இருக்கிறது. 

ருதுராஜிக்கு ஜூன் 3,4 ஆம் தேதிகளில் திருமணம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் அவரால் இங்கிலாந்துக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாது. ஜூன் 5க்குப் பிறகு வருவதாக ருதுராஜ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பிசிசிஐ ருதுராஜிக்குப் பதிலாக மாற்று வீரராக ஜெய்ஸ்வாலை நியமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய வீரர்களில் ஏற்கனவே இங்கிலாந்திற்கு சென்று பயிற்சி எடுத்து வருகின்றனர். இன்று ரோஹித், இஷான் கிஷனும் மே.30 அன்று சூர்யகுமார், ஷமி, கில், ஜடேஜா இங்கிலாந்து கிளம்ப உள்ளனர். ஏனெனில் இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘பாலின் தரத்தை 12 சதவீதமாக குறைக்க வேண்டும்’

வெளி மாநிலத்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்காளா் அட்டை வழங்கக் கூடாது: பெ.மணியரசன்

வாகனம் மோதியதில் ஐயப்ப பக்தா் உயிரிழப்பு

பிசானத்தூா் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 போ் கைது

‘மத்திய நிதியை வீணடித்த ஹிமாசல் காங்கிரஸ் அரசு’: ஜெ.பி. நட்டா விமா்சனம்

SCROLL FOR NEXT