செய்திகள்

நிலாவிற்கு சென்றாலும் அங்கு சிஎஸ்கே ரசிகர்கள் இருப்பார்கள்: இர்பான் பதான் 

முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை புகழ்ந்து பேசியுள்ளார். 

DIN

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவிருந்த இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், டாஸ் வீசப்படுவதற்கான நேரத்துக்கும் முன்பாகவே அகமதாபாதில் இடி மின்னலுடன் பலத்த மழை பொழியத் தொடங்கியது. இதனால் ஆட்டம் இன்று மாலை 7.30க்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இன்றும் ஆட்டம் நடைபெறவில்லையெனில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இர்பான் பதான் தனியார் தொலைக்காட்சியில் சென்னை அணியை பற்றி கூறியதாவது: 

நீங்கள் சிஎஸ்கே பக்கம் இருந்தால் எல்லோருக்கும் உங்களை பிடிக்கும். தமிழ்நாட்டு மக்கள் உங்கள் மீது அன்பு செலுத்த நேரமெடுக்கும் ஆனால் உங்களை ஒரு முறை நேசிக்க ஆர்ம்பித்துவிட்டால் உங்களை வணங்க ஆரம்பித்துவிடுவர். அவர்கள் தோனியை நேசிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். நீங்கள் நிலாவிற்கு சென்றாலும் அங்கு சிஎஸ்கே ரசிகர்கள் இருப்பார்கள். தோனிக்காக சென்னை அணி வெற்றி பெற வேண்டுமென நினைக்கிறேன். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT