கோப்புப்படம் 
செய்திகள்

அகமதாபாத்தில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பு: சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

அகமதாபாத்தில் இன்று மாலை மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால்,  சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

DIN

அகமதாபாத்தில் இன்று மாலை மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால்,  சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதவிருந்த இறுதி ஆட்டம் கன மழை காரணமாக, திங்கள்கிழமைக்கு (மே 29) ஒத்திவைக்கப்பட்டது.  இறுதி ஆட்டம் ‘ரிசா்வ்’ நாளான திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக நேற்று இரவு 11 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

நேற்று, டாஸ் வீசப்படுவதற்கான நேரத்துக்கும் முன்பாகவே அகமதாபாதில் இடி மின்னலுடன் பலத்த மழை பொழியத் தொடங்கியது. இதனால் மைதானத்தின் ஆடுகளம் தாா்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டன. இறுதி ஆட்டத்தைக் காண ஆவலோடு வந்த ரசிகா்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் மைதான வளாகத்திலேயே ஒதுங்கி காத்திருந்தனா்.

இந்நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான ஐபிஎல் 2023-ன் இறுதிப் போட்டி இன்று (மே 29) நடைபெற உள்ளது. 

அகமதாபாத்தில் இன்று(திங்கள்கிழமை) பிற்பகலில் மழை பெய்யக்கூடும் என தகவல் வெளியானதால், ஒருவேளை, ஆட்டத்தை நடத்த முடியாமல் போகும் சூழலில், விதிகளின்படி லீக் சுற்றில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். 

அந்த வகையில் குஜராத் அணி மீண்டும் சாம்பியனாகி, கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

SCROLL FOR NEXT