செய்திகள்

உலகத்தில் எங்கேயும் இதுபோல ரசிகர்களை பார்க்க முடியாது: மொயின் அலி நெகிழ்ச்சி! 

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை பாராட்டி பேசியுள்ளார் சிஎஸ்கே வீரர் மொயின் அலி. 

DIN

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவிருந்த இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், டாஸ் வீசப்படுவதற்கான நேரத்துக்கும் முன்பாகவே அகமதாபாதில் இடி மின்னலுடன் பலத்த மழை பொழியத் தொடங்கியது. இதனால் இன்று மாலை 7.30 மணிக்கு ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 

தற்போது அகமதாபாத்தில் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று மழையினால் பாதிக்கப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள் இரயில் நிலையலங்களில் தூங்கிக் கொண்டிருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை பார்க்க முடிந்தது. 

மைதானத்திற்கு நுழையும் வழியில் மொயின் அலி ரசிகர்களின் கூட்டத்தினை விடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “உலகில் எங்குமே இதுபோல ரசிகர்களின் ஆதரவினை பார்க்க முடியாது. ஐபிஎல்லில் சிறந்த அணியான சிஎஸ்கேவிற்காக விளையாடுவதில் பெருமையாக உணர்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் சென்னை, 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!

அன்புமணி பெயரை சொல்லாத ராமதாஸ்!

அழகூரில் பூத்தவள்... ஸ்வாதி சர்மா!

மான் விழி... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT