செய்திகள்

தோனியிடம் தோற்றதில் கவலையில்லை: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

தோனியிடம் தோற்றதில் கவலைப்பட மாட்டேன் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

DIN

தோனியிடம் தோற்றதில் கவலைப்பட மாட்டேன் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சென்னைக்கு இது 5-ஆவது சாம்பியன் பட்டமாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் சோ்த்தது. பின்னா் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட, சென்னைக்கான இலக்கு 15 ஓவா்களில் 171 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டது. அதில் சென்னை 15 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் சோ்த்தது. கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் மற்றும் ஃபோரை அடுத்தடுத்து அடுத்து சென்னை அணியை ‘த்ரில்’ வெற்றி பெற வைத்தார் ஜடேஜா.

இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு ஹர்திக் பாண்டியா பேசுகையில்,

தோனி வெற்றி பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றி அவருக்கானது என்று விதி எழுதப்பட்டிருக்கிறது. அவருக்கு எதிராக தோல்வி அடைந்ததை நினைத்து கவலைப்பட மாட்டேன். நான் கடந்தாண்டு கூறினேன், நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் என்று. நான் சந்தித்த சிறந்த மனிதர்களில் தோனியும் ஒருவர்.

சென்னை அணி எங்களைவிட நல்ல கிரிக்கெட்டை விளையாடினார்கள். சாய் சுதர்ஷன் சிறப்பாக விளையாடினார் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி 173 - இயக்குநரும் கதையும்?

அழகென்ற சொல்லுக்கு... மஹானா சஞ்ஜீவி!

எஸ்ஐஆருக்கு எதிரான புதிய மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் டிச.4 விசாரணை!

ஐஆர்சிடிசி ஊழல் வழக்கு: ராஃப்ரி தேவி மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT