செய்திகள்

மான்செஸ்டர் சிட்டிக்கு 4-ஆவது வெற்றி

ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் ஒன்றான சாம்பியன்ஸ் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி 3-0 கோல் கணக்கில் யங் பாய்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.  

DIN

ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் ஒன்றான சாம்பியன்ஸ் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி 3-0 கோல் கணக்கில் யங் பாய்ஸை புதன்கிழமை வீழ்த்தியது. 
மான்செஸ்டர் சிட்டிக்கு 4 ஆட்டங்களில் இது 4-ஆவது வெற்றியாகும். யங் பாய்ஸுக்கு இது 3-ஆவது தோல்வி. 
இந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் அணிக்காக எர்லிங் ஹாலந்த் (23', 51'), ஃபில் ஃபோடன் (45+1') ஆகியோர் கோலடிக்க, யங் பாய்ஸுக்காக சாண்ட்ரோ லாபர் (53') ஸ்கோர் செய்தார். இதர ஆட்டங்களில் அட்லெடிகோ மாட்ரிட் 6-0 கோல் கணக்கில் செல்டிச்சை வீழ்த்த, பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் 1-2 கோல் கணக்கில் ஏசி மிலனிடமும், பார்சிலோனா 0-1 என ஷக்தர் டொனெட்ஸ்கிடமும் தோல்வி கண்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT