கோப்புப் படம் 
செய்திகள்

உலகக் கோப்பை அரையிறுதி, இறுதிப் போட்டி டிக்கெட் இன்று விற்பனை!

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட் இன்று இரவு விற்பனை செய்யப்படவுள்ளது.

DIN

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட் இன்று இரவு விற்பனை செய்யப்படவுள்ளது.

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதுவரை 40 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்து இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

கடைசி இடத்துக்காக நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் போராடி வருகின்றன.

இந்த நிலையில், மும்பையில் வரும் 15-ஆம் தேதி முதல் அரையிறுதி, கொல்கத்தாவில் 16-ஆம் தேதி இரண்டாவது அரையிறுதி மற்றும் அகமதாபாத்தில் 19-ஆம் தேதி இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு ‘புக்மைஷோ’ இணையதளத்தில் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

முதல் அரையிறுதியில் இந்தியாவுடன் நான்காவது இடம் பிடிக்கும் அணியும், இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும் மோதவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT