செய்திகள்

சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிப்பு?

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ், அந்த அணியிலிருந்து விடுவிக்க உள்ளதாகத் தகவல்.

DIN

இங்கிலாந்து  அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஜூலையில் ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவர் தனது ஓய்வு முடிவை இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக அண்மையில் திரும்பப் பெற்றார்.

தற்போது, நடந்து முடிந்த உலகக் கோப்பை லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து கடும் தோல்வியைச் சந்தித்ததுடன் புள்ளிப்பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணிக்குக் கீழே இடம் பிடித்து தொடரிலிருந்து வெளியேறி இங்கிலாந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், பென் ஸ்டோக்ஸ் உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களிடையே அவரின் ஆட்டம் குறித்து எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், அவர் பெரிதாக ரன்களைக் குவிக்கவில்லை. இருப்பினும், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்தார்.

இந்நிலையில், கடந்த ஐபிஎல் தொடரில் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், காயம் காரணமாக அத்தொடரில் அவரால் விளையாட முடியவில்லை. தற்போது, இதன் காரணமாக ஸ்டோக்ஸின் ஆட்டத் திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஸ்டோக்ஸை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2024 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இதற்கான அறிவிப்பை சிஎஸ்கே வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஸ்டோக்ஸ் தனக்கு ஏற்பட்ட கணுக்கால் பிரச்னைக்காக அறுவை சிகிச்சையை செய்து மீண்டும் ஒருநாள் போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT