செய்திகள்

7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி: இறுதிப் போட்டிக்கு தேர்வான இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

DIN

மும்பை வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.  50 ஓவர் முடிவில் இந்தியா 397 ரன்களைக் குவித்தது. கோலி 117, ஸ்ரேயாஷ் ஐயர் 105, ஷுப்மன் கில் 80  ரன்கள் எடுத்து அசத்தினார்கள். 

ஒருநாள் போட்டியில் 50வது சதமடித்து சாதனை படைத்த விராட் கோலி... 

அடுத்து ஆடிய நியூசி. அணி போராடி தோற்றது. 48.5 ஓவர்களில் நியூசி. அணி 327/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

தொடக்க வீரர்ரகளான கான்வே, ரச்சின் ரவீந்திரா தலா 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். டேரில் மிட்செல் அதிரடியாக இறுதி வரை போராடி 134 ரன்களில் ஆட்டமிழந்தார். வில்லியம்சன் 69, பிலிப்ஸ் 41 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.   

ஆட்ட நாயகன் ஷமி... 

இந்தியா சார்பாக முகமது ஷமி 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். சிராஜ், பும்ரா, குல்தீப் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தார்கள். முகமது ஷமி ஆட்ட நாயகன் விருது பெற்றார். 

இதன்மூலம் முதல் அணியாக உலகக் கோப்பை 2023இன் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தேர்வாகியுள்ளது. நாளை ஆஸி.-தெ.ஆ. அணிகள் 2வது அரையிறுதியில் பலப்பரீட்சை செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரையில் ஆண் சடலம்

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

SCROLL FOR NEXT