செய்திகள்

உலகக் கோப்பை இறுதிப்போட்டியைப் பார்க்க மாட்டேன்: தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்

DIN

உலகக் கோப்பை இறுதிப்போட்டியைப் பார்க்க மாட்டேன் என தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் தொடங்கிய உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த உலகக் கோப்பைப் தொடரில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளைப் பெற்று இந்தியா அசைக்க முடியாத அணியாக உள்ளது. இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 3  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதிப் போட்டிகளில்  தோல்வியடைந்து வெளியேறும் தென்னாப்பிரிக்காவின் நிலை மீண்டும் தொடர் கதையாகியுள்ளது.

இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பார்க்கப் மாட்டேன் என தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமென்றால், உலகக் கோப்பை இறுதிப்போட்டியை நான் பார்ப்பதற்கான வாய்ப்பு ஒரு சதவிகிதம் மட்டுமே உள்ளது. உண்மையில், நான் உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பார்க்க மாட்டேன். இறுதிப்போட்டி குறித்து எனக்கு கவலை இல்லை. இருப்பினும், சொந்த மண்ணில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றுவது பொருத்தமானதாக இருக்கும். சொந்த மண்ணில் நடைபெறுவதால் இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆஸ்திரேலிய அணியிலும் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களும் கோப்பையை வெல்லும் திறன் கொண்ட அணிதான்.

தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமாவை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு 100  சதவிகித உடல் தகுதியுடன் இல்லாதபோதிலும்  அணியை சிறப்பாக வழிநடத்தினார். அவர் அணியை வழிநடத்திய விதம் நம்பமுடியாததாக இருந்தது. சிறிய ஸ்கோரை எடுத்தப் பிறகு அதற்கு ஏற்றவாறு அவர் அணியை அழுத்தமான சூழலில் சிறப்பாக வழிநடத்தினார். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் என்றார்.

அகமதாபாத்தில் நாளை மறுநாள் (நவம்பர் 19) நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT