செய்திகள்

இறுதிப்போட்டியில் இதைச் செய்யாதீர்கள்; இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி அறிவுரை!

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி எந்த ஒரு புதிய விஷயத்தையும் முயற்சிக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

DIN

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி எந்த ஒரு புதிய விஷயத்தையும் முயற்சிக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் நாளை மறுநாள் (நவம்பர் 19) அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி மிகவும் பதற்றமின்றி இருப்பதாக நினைக்கிறேன். அனுபவம் வாய்ந்த இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது. இதுவரை இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி புதிதாக எந்த ஒரு விஷயத்தையும் முயற்சிக்க வேண்டாம். இதுவரை விளையாடியது போன்றே இறுதிப்போட்டியிலும் விளையாடுங்கள். இந்திய அணி உலகக் கோப்பையை கண்டிப்பாக வெல்லும்.

இறுதிப்போட்டியில் இந்திய அணி பதற்றமடையத் தேவையில்லை. வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ஒவ்வொரு போட்டியிலும்  வீரர்கள் அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்து வருவது இந்திய அணியின் பலமாக உள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக உள்ளது. தற்போது இருக்கும் இந்திய அணி மிகச் சிறந்த பந்துவீச்சாளர்கள் வரிசையைக் கொண்டுள்ளது  என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

32/48: 2026 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தேர்வான அணிகள்!

புதிய ஓஎஸ் உடன் டிச. 2-ல் அறிமுகமாகிறது விவோ எக்ஸ் 300!

எவர் கிரீன்... பிரியா மணி!

அணியில் யார் விளையாடாவிட்டாலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும்: ககிசோ ரபாடா

பங்குச்சந்தை மோசடியில் ரூ.3.38 லட்சத்தை இழந்த பெண்: இருவர் கைது!

SCROLL FOR NEXT