செய்திகள்

பாகிஸ்தான் அணிக்கு புதிய தேர்வுக்குழுத் தலைவர் நியமனம்!

பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக அந்த அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக அந்த அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடப்பு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்படத் தவறியது. இதனால், பாகிஸ்தான் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. பாகிஸ்தானின் கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் அசாமை நீக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதற்கிடையில், பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் அசாம் விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக அந்த அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை அணியின் புதிய தேர்வுக்குழுத் தலைவராக நியமித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்குமான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்வது அவருக்கு முதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் அணியின் மற்ற தேர்வுக் குழு உறுப்பினர்களை வஹாப் ரியாஸுடனான ஆலோசனைக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT