செய்திகள்

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு பயிற்சியாளராக தொடர்வாரா ராகுல் டிராவிட்?

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

DIN

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெளியேறிய பிறகு அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். அதன்பின், அவரது பயிற்சியின்கீழ் இந்திய அணி கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் அணியில் புதிதாக இளம் வீரர்கள் பலர் அணியில் இடம்பிடித்துள்ளனர். நடப்பு உலகக் கோப்பைத் தொடரிலும் தோல்வியே காணாத அணியாக இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. நாளையுடன் ராகுல் டிராவிட்டின் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலமும் நிறைவடைகிறது. 

இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், பிசிசிஐ தரப்பில் கண்டிப்பாக ராகுல் டிராவிட் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ராகுல் டிராவிட் பிசிசிஐ-ன் இந்த கோரிக்கையை ஏற்று மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவாரா அல்லது உலகக் கோப்பை வெற்றியுடன் தனது பயிற்சியாளர் பதவிக்காலத்தை நிறைவு செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

நாளை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில், இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லுமா என்ற கேள்விக்கும், ராகுல் டிராவிட் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்வாரா என்ற கேள்விக்கும் பதில் கிடைத்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT