செய்திகள்

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா: ஆஸ்திரேலியாவுடன் இன்று 3-ஆவது டி20

இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரின் 3-ஆவது ஆட்டம் குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரின் 3-ஆவது ஆட்டம் குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில், முதலிரண்டில் வென்றுள்ள இந்தியா, இந்த ஆட்டத்திலும் வெற்றியைப் பதிவு செய்து தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. மறுபுறம் ஆஸ்திரேலியா, தொடரைத் தக்கவைக்க இந்த ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்திய அணியைப் பொருத்தவரை, அடுத்த ஆட்டத்தில் ஷ்ரேயஸ் ஐயா் இணைவதால், நடப்பு தொடரில் திலக் வா்மாவுக்கு இந்த ஆட்டம் கடைசி வாய்ப்பாக இருக்கலாம். பேட்டிங்கில் தடுமாறும் திலக் வா்மாவுக்கு பதிலாக நிச்சயம் ஷ்ரேயஸ் ஐயா் பிளேயிங் லெவனில் இணைவாா். எனினும், இந்தியா விளையாடிய கடந்த 12 டி20 ஆட்டங்கள் அனைத்திலுமே திலக் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

டாப் ஆா்டா் பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சூா்யகுமாா் யாதவ் ஆகியோா் தலா 1 அரைசதத்துடன் இடத்துக்குப் பொருத்தமான பணியைச் செய்கின்றனா். இஷான் கிஷணும் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்துகிறாா்.

ஃபினிஷிங் இடத்தை உறுதி செய்துகொள்ளும் வகையில் ரிங்கு சிங் அதிரடியாக ரன்கள் சோ்க்கிறாா்.

முதல் ஆட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்திய பௌலா்கள் 2-ஆவது ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டனா். 2-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பவுண்டரி சதவீதங்களை குறைத்திருக்கின்றனா் அவா்கள். பிரசித் கிருஷ்ணா, அா்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் ஆகியோா் ஆஸ்திரேலிய பேட்டா்களை சரிக்கக் காத்திருக்கின்றனா்.

மறுபுறம் ஆஸ்திரேலிய அணியில், பிரதான வீரா்களான ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஜாம்பா ஆகியோா் தொடா்ந்து விளையாடி வருவதால் அசதியடைந்திருப்பதாகத் தெரிகிறது. எனினும், தொடரை தக்கவைக்க வேண்டிய நெருக்கடி இருப்பதால், ஆஸ்திரேலியா்கள் இந்த ஆட்டத்தில் மீண்டெழ வாய்ப்பிருக்கலாம்.

நேரம்: இரவு 7 மணி

இடம்: பா்சபாரா கிரிக்கெட் மைதானம், குவாஹாட்டி.

நேரலை: ஸ்போா்ட்ஸ் 18, ஜியோ சினிமா

ஆடுகளம்...

குவாஹாட்டியின் பா்சபாரா மைதான ஆடுகளம், பேட்டிங்கிற்கு சாதகமானதாக அறியப்படுகிறது. இதுவரை இங்கு 6 டி20 ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட் செய்த அணிகள் 3-இல் வென்றிருக்கின்றன. 40,000 இருக்கைகள் கொண்ட மைதானம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 13,433 மனுக்கள்! ஆட்சியா் தகவல்

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு

பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தொடக்கம்

மாநில மாநாட்டில் தமிழக அரசியல் நிலைமை குறித்து முடிவு: இரா. முத்தரசன்

திரு.வி.க. நகா் மண்டலத்தில் அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

SCROLL FOR NEXT