செய்திகள்

டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற நமீபியா!

DIN

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு நமீபியா தகுதி பெற்றதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பைத் தொடர் அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. போட்டிகள் ஜூன் 4 முதல் தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  20 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 தொடரில் ஏற்கனவே 12 அணிகள் தகுதி பெற்றுவிட்டநிலையில், ஆப்பிரிக்காவில் இருந்து நமீபியா டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது. 

டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பினைப் பெறும் தகுதிப் போட்டிகள் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பங்குபெற தகுதியடையும். இந்த தகுதிப் போட்டியில் 5 வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளுடன் +2.643 என்ற நல்ல ரன் ரேட்டுடன் வலுவாக உள்ள நமீபியா தகுதி பெற்றுள்ளது. 

உலகக் கோப்பை டி20 தொடரில் பங்கேற்க நடைபெறும் தகுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறும் போட்டியில் உகாண்டா, கென்யா, ஜிம்பாப்வே, நைஜீரியா போன்ற அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT