கோப்புப் படம் (விராட் கோலி) 
செய்திகள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கோலி ஓய்வு?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களிலிருந்து இந்திய வீரர் விராட் கோலி ஓய்வு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களிலிருந்து இந்திய வீரர் விராட் கோலி ஓய்வு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நிறைவடைந்தவுடன், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் டி20 தொடர் நடைபெற்று வருகின்றது.

இந்த தொடரில் உலகக் கோப்பையில் பங்கேற்ற பெரும்பாலான வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சூர்யகுமார் தலைமையில் இளம் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 10-ஆம் தேதிமுதல் தென்னாப்பிரிக்கா அணியுடன் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்த நிலையில், டிசம்பர் 10 முதல் 21 வரை நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து பிசிசிஐயிடம் விராட் கோலி ஓய்வு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அணியில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளர்ந்த நிலா... மடோனா செபாஸ்டியன்!

தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் நிவாரணம்: உ.பி. அரசு

ரஷிய அதிபர் புதினுடன் பேசிய மோடி!

பகலை இரவாக்கிய கருமேகங்கள் - புகைப்படங்கள்

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

SCROLL FOR NEXT